பேருந்தில் 50 பேர்! நல்ல வேகம்..! திடீர் நெஞ்சுவலி...! தன் உயிரை கொடுத்து பயணிகளை காப்பாற்றிய டிரைவர்! நெகிழ்ச்சி செயல்!

பேருந்து ஓட்டுநருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்ட துயரமானது சங்கராபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் என்னுமிடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள ரிஷிவந்தயத்தை சேர்ந்தவர் பாண்டியன். பாண்டியனின் வயது 50. இவருக்கு 40 வயதில் ஒரு மனைவியும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர் சங்கராபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஓட்டுநராக பணியாற்றி  வந்தார்.

நேற்று வழக்கம் போல சங்கராபுரத்தில் இருந்து மல்லாபுரத்திற்கு பேருந்தை இயக்கி வந்தார். பிற்பகல் 2 மணி அளவில் மல்லாபுரத்திலிருந்து சங்கராபுரத்துக்கு பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். தேவபாண்டலம் எனும் இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பாண்டியனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதனால் பேருந்து சற்று கட்டுப்பாட்டில் இருந்து விலக தொடங்கியது. தனக்கு ஏற்பட்டுள்ள நெஞ்சு வலியையும் பொருட்படுத்தாமல் பாண்டியன் மிகுந்த சிரமத்திற்கு பின்னர் பேருந்தை பத்திரமாக ஓரமாக நிறுத்தியுள்ளார். பின்னர் ஸ்டீயரிங் மீது மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

உடனடியாக நடத்துனர் மற்றும் பயணிகள் ஆம்புலன்ஸை சம்பவயிடத்திற்கு வரவழைத்தனர். ஆம்புலன்சில் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பாண்டியனை அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

பேருந்திலிருந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக காப்பாற்றிய பாண்டியனை மருத்துவர்களால் காப்பாற்ற இயலவில்லை. இந்த சம்பவமானது சங்கராபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.