செல்போனில் பேசியபடியே தனியார் பேருந்து ஓட்டுநர், பேருந்தை ஓட்டி சென்ற வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு கையில் ஸ்டியரிங்! மறு கையில் மொபைல்! வாட்ஸ் ஆப்பில் சேட்டிங் செய்து கொண்டே பஸ் ஓட்டிய டிரைவர்! பயணிகள் உயிர்?
திண்டுக்கல்லில் செந்துறைக்கு ராமகிருஷ்ணன் என்பவர் தனியார் பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். பேருந்தை ஓட்டி கொண்டு இருந்தபோது தன்னுடைய செல்போனை உபயோகித்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் செல்போனை உபயோகிக்க வேண்டாம் என்று அவரிடம் அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும் அவர் தொடர்ந்து செல்போனை உபயோகப்படுத்தி கொண்டேயிருந்தார். தன்னுடைய செல்போனில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைத்தளங்களை உபயோகப்படுத்தினார்.
பேருந்தை ஓட்டுவதன் மீது கவனம் செலுத்தாமல், தன்னுடைய செல்போனில் ஓட்டுநர் கவனம் செலுத்தியது பயணிகளுக்கு பேர் அதிர்ச்சியை தந்தது. உடனடியாக பயணிகளில் ஒருவர் ஓட்டுநரின் அக்கறையற்ற செயலை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார்.
இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.