அடேங்கப்பா, இத்தனை நலத்திட்டங்களா..? நல்லாட்சி தொடர வேண்டுகோள் விடுக்கும் முதல்வர், துணை முதல்வர்.

தேர்தலுக்கு இன்னமும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. செய்த சாதனைகளை பட்டியல் போட்டு திகைக்க வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


இது தொடர்பாக முதல்வரும் துணைமுதல்வரும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த மாபெரும்‌ இயக்கத்தில்‌ இருபெரும்‌ தலைவர்களும்‌ ஏழை, எளிய மக்களுக்கான எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள்‌. அவர்கள்‌ செயல்படுத்திய திட்டங்களின்‌ அடிப்படையில்‌ தான்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களின்‌ நல்லாசியுடன்‌ அம்மாவின்‌ அரசு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

நாட்டில்‌ எத்தனையோ கட்சிகள்‌ ஆட்சியில்‌ இருந்திருக்கிறது. ஆனால்‌, மக்கள்‌ நலன்‌ ஒன்றையே கருத்தில்கொண்டு மிகச்‌ சிறப்பான நல்ல திட்டங்களை எல்லாம்‌ அறிவித்து, ஒரு நல்ல ஆட்சியை மக்களுக்காக நடத்திக்‌ கொண்டிருக்கிற கட்சிதான்‌ அளைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌. புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌., புரட்சித்‌ தலைவி அம்மா ஆகியோர்‌ வழியில்‌, நாள்தோறும்‌ மக்களுக்கான நல்ல பலத்‌ திட்டங்களை அறிவித்து, ஏழை, எளிய மக்களில்‌ வாழ்வாதாரத்தை இந்த அரசு போற்றிப்‌ பாதுகாத்து வருகிறது.

சட்டமன்ற மரபுகளை மதிக்காத திமுக-வினர்‌ தற்போது ஆட்சிக்கு வரவேண்டுமென துடித்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்‌, கட்டப்‌ பஞ்சாயத்து, நில அபகரிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை, சட்டம்‌ ஒழுங்கு சீர்கேடு, அனைத்துத்‌ துறைகளிலும்‌ ஊழல்‌, நிர்வாகச்‌ சீர்கேடு போன்ற பல்வேறு பிரச்சினைகளை வழிவகுத்து தமிழ்‌ நாட்டில்‌ அமைதியற்ற சூழ்நிலை ஏற்படும்‌ என்பதை தமிழக மக்கள்‌ நன்கு உணர்ந்து வாக்களிக்க வேண்டும்‌.

மாண்புமிகு அம்மா அவர்களின்‌ நல்லாசியோடு கழக அரசு பொறுப்பேற்றதில்‌ இருந்து எதிர்க்கட்சிகளால்‌ பல்வேறு இடையூறுகள்‌, இன்னல்கள்‌ ஏற்படுத்தப்பட்டன. இதையெல்லாம்‌ தமிழக மக்களின்‌ துணையோடும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்‌ தொண்டர்களின்‌ துணையோடும்‌, புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களின்‌ நல்‌ஆசியோடும்‌ அனைத்திலும்‌ வெற்றிகண்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு ஒரு நல்லாட்சியை மாண்புமிகு அம்மா அவர்களின்‌ அரசு வழங்கி இருக்கின்றது.

அவ்வாறு வழங்கியதன்‌ காரணமாக கீழ்க்கண்டவாறு பல்வேறு துறைகளில்‌ சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது என்பத நாட்டு மக்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்‌. கிராமப்புற மாணவர்களும்‌ பொறியியல்‌ கல்வி பயில புதியதாக 4 பொறியியல்‌ கல்லூரிகள்‌ துவக்கப்பட்டுள்ளன. என்று இதுவரையிலான சாதனைகளை பட்டியல் போட்டுள்ளனர். 

எனவே அனைவரும் அமைதியுடனும்‌ வளமுடனும்‌ வாழ்வதற்கு வழிவகை செய்திருக்கிறது. இது போன்ற சாதனைகள்‌ தொடரவும்‌, தமிழகம்‌ அமைதியாக இருக்கவும்‌, 2021 சட்டமன்றப்‌ பொதுத்‌ தேர்தலில்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தை ஆதரித்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறச்‌ செய்வீர்‌ என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.