சிசு முழுமையான வளர்ச்சி அடைவதற்கு 40 வாரங்கள் போதுமானது. ஆனால் சில நேரங்களில் குறிப்பிட்ட கால அளவைத் தாண்டியும் பிரசவம் நேராமல், வயிற்றுக்குள் சிசு வளர்வதுண்டு. 42 வார காலத்துக்குப் பிறகு குழந்தை வயிற்றில் இருப்பதும் ஆபத்தாகவே கருதப்படுகிறது.
குழந்தை சற்று முதிர்ச்சிக்கு பின் பிறப்பதில் என்னென்ன இன்னல்களை சந்திக்க கூடும் பாருங்க...
·
குழந்தையின் தலை எலும்புகள் கடினமடைந்துவிடும்
என்பதால் சுகப்பிரசவம் சிக்கலாகலாம்.
·
குழந்தையின் எடை அதிகமாக இருக்கலாம்
என்பதாலும் சுகப்பிரசவம் சாத்தியமில்லாமல் போகிறது.
·
பொதுவாகவே முதிர்ச்சிக்கு பிந்தைய
பிரசவம் மிகவும் நீண்ட நேரம் நீடிக்கிறது. அதனால் குழந்தைக்கு ஆக்சிஜன் பரிமாற்றம்
பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படலாம்.
·
பிரசவத்திற்காக காத்திருக்கும் காலம்
அதிகரிக்கும்போது, அது தாய்க்கும் சேய்க்கும் மிகுந்த சிக்கலை உண்டாக்கலாம்.
பொதுவாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு
முதிர்ச்சி காலத்திற்கு பிறகே பிரசவம் நடக்கிறது. இதற்காக காத்திராமல் சிசேரியன் மூலம்
குழந்தையை வெளியே எடுப்பது நல்லது