திருமணமான முதலிரவில் அறைக்கு சென்ற தம்பதியினர் ஆபத்தான நிலையில் உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசை ஆசையாக முதலிரவு அறைக்குள் சென்ற புதுமணத் தம்பதி..! மறுநாள் சடலமாக கிடந்த பெண்! உயிருக்கு போராடிய மாப்பிள்ளை! அதிர்ச்சி சம்பவம்!
பாகிஸ்தான் நாட்டில் லாகூர் எனுமிடம் அமைந்துள்ளது. நேற்று சவீரா என்ற 20 வயது பெண்ணுடன் வாசிம் என்ற இளைஞருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
புதுதம்பதியினர் நேற்றிரவு தங்களுடைய படுக்கை அறைக்கு சென்றுள்ளனர். குளிர் அதிகமாக இருந்ததால் சூட்டடுப்பை இருவரும் பயன்படுத்தியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக இருவரும் அதனை அணைக்க மறந்துவிட்டனர். அந்த சூட்டடுப்பிலிருந்து வெளியேறிய விஷவாயுவால் இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருவரும் தங்களுடைய சுயநினைவை இழந்துள்ளனர். மறுநாள் காலையில் நெடுநேரமாக அவர்களுடைய உறவினர்கள் அறையின் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் எந்தவித பதிலும் இல்லாததால் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது இருவரும் சுயநினைவை இறந்து கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், சவீரா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் வாசிமுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.