இனியாவது மக்கள் பேரிச்சம்பழத்தை விரும்பி சாப்பிடும் போது, கொட்டையையும் துப்பாமல் சாப்பிட்டால் பல்வேறு விதமான நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த செய்தியின் மூலம் தெரிந்து கொள்வோம்.
குப்பையில் வீசப்படும் பேரீட்சம் பழ கொட்டை..! தவறிக் கூட செய்யக்கூடாத மாபெரும் தவறு இது..! ஏன் தெரியுமா?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று பேரிச்சம்பழம். இந்தப் பழமானது ஆபிரிக்கா மற்றும் அரபுநாடுகளில் அதிகமாக விளையும் தன்மை கொண்டன. இந்த பழம் சுவை தருவது மட்டுமின்றி, ஆயுர்வேதம் சித்தா, யுனானி மருத்துவ முறைகளிலும் பயன்படுகின்றது.
பேரிச்சம்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, கால்சியம், வைட்டமின் இ போன்ற அதிக சத்துக்கள் உள்ளன. பேரிச்சம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மை குறித்து பார்ப்போம்.
ரத்த சோகை பிரச்சினை உடையவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நன்மையை பெறுவர். கர்ப்பமாக இருக்கக்கூடிய பெண்கள், தினமும் பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை அறவே நீங்கிவிடும்.
மலச்சிக்கலால் சிரமப்பட்டு வருபவர்கள் இரவு நேரத்தில் பேரிச்சம் பழத்தை தண்ணீரில் நன்றாக ஊறவைத்து, காலையில் சாப்பிட்டு வந்தால் மலத்தை எளிதில் கழிக்கலாம். பழத்தில் உள்ள நார்ச்சத்து நிச்சயமாக உடலின் செரிமானத்தை சீராக்கி விடும்.
கண்பார்வை குறைவாக உள்ளவர்கள் நிச்சயமாக பேரீச்சம் பழத்தை சாப்பிடவேண்டும். அவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ உடலில் அதிகரிக்கும். அவ்வகையில் பார்வைத் திறனும் உடலில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
பற்சொத்தையினால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் நிச்சயமாக பேரிச்சம் பழத்தினால் நன்மை அடைவர். பற்களை பாதுகாக்க தேவைப்படும் ஃப்ளோரின் பேரிச்சம் பழத்தில் அதிகமாக உள்ளது.
அதேபோன்று பேரிச்சம் பழம் மட்டுமின்றி அதன் கொட்டையும் மருத்துவ தன்மை வாய்ந்தது. பேரிச்சம்பழம் கொட்டையை துப்பிவிடாமல், நன்கு அரைத்து பொடியாக்கி வாரம் ஒரு முறை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலின் பலம் அதிகரிக்கும்.
இவ்வாறு இந்த செய்தியில் நாம் பேரிச்சம்பழம் மற்றும் அதன் கொட்டையிலுள்ள நமக்குத் தெரியாத செய்திகளை தெரிந்துகொண்டோம்.