சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நம்ம சின்ன தல ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புது கேப்டன்! இன்றைய போட்டியில் தோனி விலகல்!
தொடர்ந்து விலையாடுவதால் தோனி இன்றைய போட்டியில் இருந்து ஓய்வு எடுத்து கொண்டுள்ளார். தோனி யாரும் எதிர்பாராத வகையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்த முடிவால் சாம் பில்லிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரே தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் இன்றைய போட்டியில் செய்வார். மேலும் மிச்சேல் சான்டநெருக்கு பதிலாக சுழற் பந்து வீச்சாளர் கரண் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் சென்னை அணியின் கேப்டன் ரெய்னா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அணைத்து அணியும் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்யும் போது ரெய்னா மட்டும் வித்தியாசமாக பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இன்னும் என்ன என்ன வித்தியாசமான விஷயங்கள் இந்த போட்டியில் நடக்கப்போகிறது என்று.