மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி TNPL தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி tnpl தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது .


டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி தகுதி பெற்றுவிட்டது .

டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் மற்றொரு அணி யார் என்பதை முடிவு செய்யும் குவாலிபயர் 2 போட்டியில் முதலில் பேட் செய்த திண்டுக்கல்  டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்தது .அந்த அணியின் ஹரி நிஷாந்த் 51 ரன்களும் ஜெகதீசன் 50 ரன்களும் எடுத்தனர் .

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணி  தொடக்கம் முதலே திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின்  பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது . இதனால் அந்த அணி 130 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது .

திண்டுக்கல் அணியின் ராமலிங்கம் ரோஹித்  மற்றும் சிலம்பரசன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர் .இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி  tnpl ஆட்டத்தில் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ்அணியுடன் மோத உள்ளது .