பிரசவத்திற்காக வந்த பெண்ணின் கருப்பைக்குள் பஞ்சை வைத்து மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டு சம்பவமானது தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவத்திற்கு வந்த பெண்ணின் கர்ப்ப பைக்குள் மர்ம பொருளை வைத்து தைத்த டாக்டர்கள்..! தேனி அரசு மருத்துவமனையில் விபரீதம்!
தேனி மாவட்டத்தில் மேல கூடலூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட மஞ்சை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் வாஞ்சிநாதன். இவர் அப்பகுதியில் விவசாயியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு முத்துச்செல்வி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இதனுடைய என்னுடைய மனைவி சென்ற ஆண்டு 3-வது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.
ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதியன்று முத்துச்செல்விக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை காரில் ஏற்றிக்கொண்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கணவர் வாஞ்சிநாதன் சென்றுள்ளார். மருத்துவமனையை அடைந்தவுடன் காரிலேயே முத்துச்செல்விக்கு குழந்தை பிறந்தது. உடனடியாக, செவிலியர்கள் மருத்துவர்கள் விரைந்து வந்து முதலுதவி செய்தனர்.
பின்னர் மருத்துவமனையில் முத்துச்செல்வி அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள் முகம் சுளித்துக் கொண்டு பிரசவத்திற்கு பிந்தைய முதலுதவிகளை செய்துள்ளனர். அவருடைய கருப்பை கழிவுகளை குழந்தை கொண்டதாக கூறி கம்பம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
உடனடியாக வாஞ்சிநாதன் தன்னுடைய மனைவியை கம்பம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சில சிகிச்சைகளை மேற்கொண்டு பின்னர் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக கூறி வாஞ்சிநாதன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டிற்கு வந்ததிலிருந்து முத்துச்செல்வி அடிவயிற்றில் அது வலியால் துடித்து வந்துள்ளார். உச்சகட்டமாக நேற்று முன்தினம் வலி தாங்காமல் அவர் மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக வாஞ்சிநாதன் முத்துச்செல்வி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு முத்துச்செல்வியை பரிசோதித்த மருத்துவர்கள், கருப்பையை சுத்தம் செய்வதற்காக ஒரு கையடி பஞ்சை அரசு மருத்துவர்கள் பயன்படுத்தி இருப்பதாக கூறி வெளியே எடுத்துக்காட்டியுள்ளனர்.
அதைப் பார்த்தவுடன் பதறி அடித்துக்கொண்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு நியாயம் கேட்க சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு முறையான பதில் கிடைக்கவில்லை. உடனடியாக, கூடலூர் காவல் நிலையத்திற்கு சென்று நிகழ்ந்தவற்றை கூறி புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசாரித்து அழைப்பதாக கூறியுள்ளனர். இதிலும் மன அமைதி அடையாத வாஞ்சிநாதன் நேராக கூடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போதுதான் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலெக்டருடன் உரையாடி கொண்டிருந்தார். ஆதலால் வாஞ்சிநாதன் வேறுவழியின்றி புகார் மனுவை கலெக்டர் உதவியாளரிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து மறுநாள் கலெக்டரிடம் வினவிய போது, "சம்பந்தப்பட்ட மனு தன்னுடைய கவனத்திற்கும் வந்துள்ளதாகவும், அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.