திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா சிறப்பு வழிபாடு! பரபரப்பு காரணம்!
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளில் வரும் 21-ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. 2 தொகுதியிலும் அதிமுக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ரூபி மனோகரனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஸ்டாலினின் மனைவியான துர்கா ஸ்டாலின் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளார்.
நேற்று இரவே திருமலை சென்றவர், அதிகாலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளார். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஏழுமலையானுக்கு நடக்கும் சிறப்பு அபிஷேகங்களில் கலந்துகொண்டார். வழிபாடுகள் முடிந்தவுடன் அவர், ரங்கநாதர் மண்டபத்தில் பெருமாள் தீர்த்தமும், பிரசாதமும் வாங்கிக்கொண்டார்.
திருப்பதி ஏழுமலையானுக்கு சாத்தப்பட்ட சேஷ வஸ்திரத்தை வேத ஆசிர்வாதத்துடன் துர்கா ஸ்டாலினுக்கு அர்ச்சகர்கள் வழங்கினர். ஸ்டாலினின் உடல்நலத்திற்காகவும், இடைத்தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் துர்கா ஸ்டாலின் திருப்பதி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
வழக்கம்போல துர்கா ஸ்டாலின் திருமலை சென்றதற்கு பாஜகவை சேர்ந்த சில ஈனப்பிறவிகள் கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.