தொடர்ந்து தமிழகம் நல்லாட்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி செய்துவருவதை மக்கள் ஒப்புக்கொண்டு வருகின்றனர். மக்களின் கருத்தை ஆய்வு நிறுவனங்களும் அப்படியே வழிமொழிந்துள்ளன.


ஆம், பெங்களூரூவைச் சேர்ந்த பப்ளிக் அஃபயர்ஸ் சென்டர் என்னும் ஆய்வு நிறுவனம், பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் நல்லாட்சி தரும் மாநிலங்களின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், இரண்டு கோடி மக்களுக்கு அதிகமாக உள்ள மாநிலங்களை மிகப்பெரிய மாநிலங்கள் என்றும், 2 கோடி மக்கள் தொகைக்கு குறைவாக இருப்பவைகளை சிறிய மாநிலங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் நல்லாட்சி வழங்கும் மிகப்பெரிய மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தை கேரளம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்கள் கடுமையாக பின்னடைந்துள்ளன.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவிலேயே நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது. மாநில மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் நிலையான பணிகளுக்கு கிடைத்த முடிவு. நாட்டின் சிறந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பிடிக்க, நாம் அனைவரும் இணைந்து கடினமாக பணியாற்றுவோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.