ஒரே நாளில் 2500 விவசாயிகளின் கடனை அடைத்த மெகா ஸ்டார்! நெகிழ வைக்கும் காரணம்!

ஹிந்தி திரையுலகின் ஜாம்பவானான நடிகர் அமிதாப் பச்சன் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் கடனை அடுத்து வருவது பாலிவுட் அரங்கில் மட்டுமின்றி இந்தியா முழுவதில் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


சமீப காலத்தில் பாலிவுட்டின் பாட்ஷா என்று போற்றப்படும் அமிதாப் பச்சன் நம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்புகளான விவசாயிகளின் மீது பரிவு காட்டி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு இவர் உத்திரப்பிரதேச மாநிலத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாத 1,398 பேரின் விவசாய கடனை வங்கியில் அடைத்தார். இதேபோன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக் கடன்களை அடைத்தார்.

சமீபத்தில் பிஹார் மாநிலத்தில், பொருளாதார நிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட விவசாயிகளின் கடன்களை அடைத்துள்ளார். 2500-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கடன்களை இந்த மாதத்தில் அவர் திருப்பி செலுத்தியுள்ளார். இவர்களில் சிலரை தன் வீட்டிற்கு அழைத்து தேவையான பணத்தை தன் மகள் ஸ்வேதா மற்றும் தன் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கைகளால் அளித்தார்.

மீதமுள்ளவர்களுக்கு வங்கி அக்கவுண்ட் மூலமாகவே அவர்களின் விவசாய கடனை நிவர்த்தி செய்து உள்ளார். இந்த செயலானது பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்களால் வலைத்தளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றது