பிரபல தொழில் அதிபருக்கு ரெண்டாம் தாரமாகும் சிவகார்த்திகேயன் நாயகி! காரணம் என்ன தெரியுமா?

படவாய்ப்புகள் வெகுவாக குறைந்ததால் பிரபல தொழிலதிபருக்கு 2-வது மனைவியாகயிருக்க நடிகை ஒப்புக்கொண்டு சம்பவமானது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அந்த படம் மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய முதல் படத்திலேயே இவ்வளவு அழகாக நடித்துள்ளார் என்று சினிமா விமர்சகர்களிடம் நல்ல பாராட்டை ஸ்ரீதிவ்யா பெற்றார்

ஆனால் அதன்பின்னர் அவருடைய வாழ்க்கை சற்று தடுமாறி போனது. முதல் படத்திற்குப் பிறகு அவர் நடித்த ஜீவா, காக்கி சட்டை, வெள்ளக்காரதுரை ஆகிய திரைப்படங்கள் அவர் நினைத்த அளவுக்கு வெற்றியை இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். மேலும், ஒரே ஒரு படத்தில் வெற்றி பெற்று பின்னர் தோல்விகளை சந்தித்த கதாநாயகிகளின் பட்டியலிலும் சேர்ந்தார்.

அவருக்கு பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்தன. தன்னுடைய ரசிகர் பெருமக்களுகாக அவர் எவ்வளவு கடுமையாக உழைத்தும், அவரால் வெற்றி அடைய இயலவில்லை. இதனிடையே அவர் தன்னுடைய திருமண வேலைகளில் ஈடுபட்டார்.

ஹைதராபாத் நகரில் கிரானைட் தொழில் செய்து வரும் ஒரு இளைஞரை ஸ்ரீதிவ்யா திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த நபருக்கு இது 2-வது திருமணம் என்று கூறப்படுகிறது. இருவரையும் இருவருக்கும் பிடித்து விட்டதால் இது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும் திரையுலகில் வேற லெவலுக்கு சென்றிருக்க வேண்டிய கதாநாயகி ஒருவர் சிறுவயதிலேயே 2-ஆம் பாரமாக வாக்கப்பட போவதை கண்டு அவருடைய ரசிகர்கள் மீளாத்துயரில் சிக்கியுள்ளனர்.

இந்த செய்தியானது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.