இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி தன் மனைவியான பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் famous இங்கிலாந்து நாட்டில் ஷாப்பிங் சென்று இருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் மனைவியுடன் ஜாலி பண்ணும் கோலி! அப்போ உலக கோப்பை?
இந்திய அணி இங்கிலாந்து நாட்டில் உலகக் கோப்பை போட்டியில் விளையாடி வருகின்றது. விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் தற்போது வரை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை தொடங்கும் முன்பே இந்திய கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்தில் வீரர்களின் குடும்பத்தினர் 15 நாட்களுக்கு மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவர் என்று கூறியுள்ளது.
அதன்படி நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோரின் மனைவி மற்றும் குழந்தைகளும் இங்கிலாந்து நாட்டிற்கு சென்று மைதானத்தில் வீரர்களை உற்சாகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது அணியின் கேப்டனாக விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா ஷர்மா இங்கிலாந்து சென்று இருப்பது உறுதியாகியுள்ளது. சவுத்தாம்டன் என்னும் நகரில் அவரும் கோலியும் ஒன்றாக ஷாப்பிங் செய்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சனிக்கிழமை அன்று இந்தியா விளையாடும் போது விராத் கோஹ்லியை உற்சாகப்படுத்த அனுஷ்கா ஷர்மா மைதானத்திற்கு வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. சில ரசிகர்கள் உலகக் கோப்பையின் போது இவ்வாறு செய்வது கோலிக்கு அவ்வளவு நல்லதல்ல என்று புகைப்படத்தின் கீழ் கமென்ட் செய்துள்ளனர்.
எது என்னவோ உலக கோப்பை ஜெயித்த வந்தால் சரி!