ஹரியானா மாநிலத்தில் பெற்ற தந்தையே தன்னுடைய மகளை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
முதலிரவுக்கு ஒத்திகை..! பெற்ற மகளை தவறாக பயன்படுத்திய தந்தை! தாயும் உடந்தையாக இருந்த கொடுமை!
நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை பிரச்சினைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக அந்த பெண்ணின் உறவினர்களே இந்த பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் பொழுது அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வகையில் தற்போது ஹரியானா மாநிலத்தில் மிகப்பெரிய சம்பவம் அரங்கேறி உள்ளது. ஹரியானா மாநிலத்தில் பஞ்ச்குலா என்ற இடம் அமைந்துள்ளது. 23 வயதாகும் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்தப் பெண்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறி மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர் . இப்போது அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தையும் பிறந்துள்ளது. மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று பல கோணங்களில் விசாரணை செய்யப்பட்டது. இதனையடுத்து அந்தப் பெண்ணே போலீசாரிடம் தன்னுடைய தந்தை தான் கடந்த ஒரு வருட காலமாக தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாக கூறி இருக்கிறார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் கர்ப்பம் அடைந்த பின்பும் பல முறை அவரது தந்தை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் அவர் கூறி இருக்கிறார். அந்தப் பெண்ணின் குடும்பத்தில் உள்ள மற்ற நண்பர்களிடம் விசாரித்த பொழுது அவர்களுக்கு இது பற்றி ஏதும் தெரியாது என்று கூறியுள்ளனர். போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த அந்த நபரை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.