அம்மாகிட்டயே போய்டு அம்ருதா..! மருமகனை ரூ.1 கோடி கொடுத்து கொலை செய்த மாமனார் தனது மகளுக்கு எழுதிய உருக்கமான கடிதம்..! என்ன தெரியுமா?

வேறு சாதியை சேர்ந்தவரை திருமண செய்ததால் ஆத்திரமடைந்த தந்தை மாப்பிள்ளையை கொலைசெய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தெலங்கானா மாநிலத்தில் மாருதி ராவ் என்ற தொழிலதிபர் வசித்து வந்தார். இவருடைய மகளின் பெயர் அம்ரிதா ராவ். 2017-ஆம் ஆண்டில் அம்ரிதா ராவ் பிரணை குமார் என்ற இளைஞரை திருமணம் செய்து கொண்டார். குமார் தாழ்ந்த சாதியை சேர்ந்தவர் என்பதால் மாருதி ராவ் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

இதனிடையே பெற்றோரின் எதிர்ப்பை இளம் ஜோடி சந்திக்க நேர்ந்தது. இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர். அடுத்த சில மாதங்களிலேயே அமிர்தா கர்ப்பமானார். 4 மாத கர்ப்பிணியாக இருந்தபோது அமிர்தாவை, குமார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பரிசோதனை முடிவடைந்த பிறகு, மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது குமாரை கூலிப்படையினர் அதிபயங்கரமாக தாக்கி கொலை செய்தனர். இந்த சம்பவமானது 2018-ஆம் ஆண்டில் தெலுங்கானாவை உலுக்கியது.

உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் முன்விரோதம் காரணமாக மாருதி ராவுடன் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர் தன்னுடைய மகளின் திருமணமானது, தன்னுடைய சம்மதமின்றி அரங்கேற்றியதாக கூறினார். மேலும் தாழ்ந்த சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்ததாகவும், அதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலிப்படைக்கு காசு கொடுத்து குமாரை கொலை செய்ய முடிவை எடுத்ததாகவும் ஒப்பு கொண்டுள்ளார்.

வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் மாருதி ராவ் மற்றும் அவருக்கு கீழ் பணியாற்றிய கூலிப்படையினர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  அடுத்த சில மாதங்களிலேயே அமிர்தாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே மாருதி ராவ் ஜாமினில் சிறையிலிருந்து வெளியேறினார்.

நேற்று முன்தினம் அவர் தனியாக ஒரு ஓட்டல் அறையை பதிவு செய்துள்ளார். மாலை நேரத்தில் அவர் தனியாக அறைக்குள் சென்றுள்ளார். இரவு உணவு உண்டு ஓட்டுநருடன் மீண்டும் அறைக்கு சென்றுள்ளார். ஆனால் ஓட்டுனரை தன்னுடன் தங்குவதற்கு அனுமதிக்கவில்லை. ஓட்டுநரை காரில் ஒரு காகிதம் வைத்திருப்பதாக கூறி அதனை எடுத்து வர கூறியுள்ளார். ஓட்டுநர் வெளியே சென்ற பிறகு, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மறுநாள் காலையில் நெடுநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகித்த ஓட்டுநர் அறைக்கு சென்றுள்ளார்.

கதவை உடைத்து பார்த்தபோது, மாருதி ராவ் சடலத்தை கண்டதரிந்து அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னுடைய தந்தையின் சடலத்தை பார்க்க வந்த அமிர்தா ராவை குடும்பத்தினர் விரட்டி அடித்துள்ளனர்.

இந்த சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.