மேஷம் : வளர்பிறை நாளில் வரும் சனிக்கிழமைகளில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்தால், துன்பங்கள் அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சியை தருவார்.
விநாயகருக்கு அர்ச்சனை செய்யப் போகிறீர்களா..? உங்கள் ராசிப்படி எப்படி அர்ச்சனை செய்யணும் தெரியுமா?
ரிஷபம் : சதுர்த்தியன்று சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு பின் வெண்தாமரை மலரை கொண்டு விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தால் உங்களுக்கு அவரின் அருட்பார்வை நிச்சயம் கிடைக்கும்.
மிதுனம் : செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பின் அன்று மாலை வெற்றிலைபாக்கு, பழம், பானகம், பாயசம் ஆகியவற்றை வைத்து நிவேதனம் செய்து, சம்பங்கி, செந்தாமரை, மல்லி ஆகிய மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் நல்லது.
கடகம் : சங்கடஹர சதுர்த்தியன்று சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு கணேசனுக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
சிம்மம் : வெள்ளிக்கிழமை காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பின் அன்று மாலை வெற்றிலைபாக்கு, பழம், பானகம், பாயசம் ஆகியவற்றை வைத்து நிவேதனம் செய்து, அர்ச்சனை செய்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
கன்னி : புதன்கிழமைகளில காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பின் அன்று மாலை வெற்றிலைபாக்கு, பழம், பானகம், பாயசம் ஆகியவற்றை வைத்து நிவேதனம் செய்து, சம்பங்கி, செந்தாமரை, மல்லி ஆகிய மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் நலன்கள் அனைத்தும் கிடைக்கும்.
துலாம் : வளர்பிறை நாளில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்தால், அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
விருச்சிகம் : குமார சஷ்டி விரதம் இருந்து விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தால் அவரின் அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
தனுசு : நவராத்திரியன்று காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பின் அன்று மாலை வெற்றிலைபாக்கு, பழம், பானகம், பாயசம் ஆகியவற்றை வைத்து நிவேதனம் செய்து, சம்பங்கி, செந்தாமரை, மல்லி ஆகிய மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
மகரம் : செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி அர்ச்சனை செய்தால் அவரின் அருளைப் பெறலாம்.
கும்பம் : செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு பின் வெண்தாமரை, வெள்ளெருக்கு, வெள்ளரளி ஆகிய மலர்களை கொண்டு விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தால் அவரின் அருட்பார்வை கிடைக்கும்.
மீனம் : புதன்கிழமை காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பின் அன்று மாலை வெற்றிலைபாக்கு, பழம், பானகம், பாயசம் ஆகியவற்றை வைத்து நிவேதனம் செய்தால் அருளை அள்ளித்தருவார் கணேசன்.