தான் வேறு நபருடன் பழகுவதை அறிந்து கொண்ட முதல் காதலனை 2-வது காதலனின் உதவியுடன் பெண்ணொருவர் கொலை செய்திருப்பது திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 வருசம் காதலிச்சிட்டு இப்டி பண்ணிட்டியே? 2வது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை போட்டுத் தள்ளிய பெண்! ஆரணி பகீர்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள முள்ளிப்பட்டு பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த மாதம் 18-ஆம் தேதியன்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.
சுரேஷுக்கு ஆரணி அருகேயுள்ள சைதாப்பேட்டை என்னும் இடத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண்ணுடன் காதல் நிலவிவந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த போதிலும் திருமணத்திற்கு கிருஷ்ணவேணி சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் சந்தேகமடைந்தனர்.
பின்னர் தீவிரமாக விசாரனை நடத்தியதில், கிருஷ்ணவேணிக்கு அஜித்குமார் என்பவருடன் கள்ளக்காதல் நிலவி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் இருவரிடமும் விசாரணை நடத்தியபோது, கள்ளக்காதல் விவகாரமானது சுரேஷுக்கு தெரியவந்ததாகவும், அதனை சுரேஷ் கடுமையாக எதிர்த்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணவேணி, அஜித்குமாரின் உதவியுடன் சுரேஷை ஏமாற்றி வரவழைத்து கொலை செய்துள்ளனர்.
கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அஜித்குமாரை கைது செய்த நிலையில், தலைமறைவாகவுள்ள கிருஷ்ணவேணியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.