பிப்ரவரி தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தப்பட்டு வந்த நிலையில், மாதக் கடைசியில் ரூ. 656 குறைந்தது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம், வெள்ளி விலை. ஒரே நாளில் இவ்வளவு ரூபாய் உயர்வா?
ஆனால் மார்ச் 2 ஆம் தேதியிலிருந்து மீண்டும் தங்கம் விலை ஏறத்தொடங்கியுள்ளது. இன்று ஒரே நாளில் தூய தங்கத்தின் விலை ரூ. 1080/- உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இதே போல வெள்ளி விலையும் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 1,600/- அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி தூய தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 4226 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 33,808 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.4,025/- ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 32,200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1024/- அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,153/- ஆகவும், ஒரு சவரன் விலை ரூ. 33,224/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080/- அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,361/- ஆகவும், ஒரு சவரன் விலை ரூ. 34,888/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:
4.3.2020 - 1 grm – Rs. 4,361/-, 8 grm – 34, 888/- ( 24 கேரட்)
4.3.2020 – 1 grm – Rs. 4,153/-, 8 grm – 33,224/- (22 கேரட்)
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ. 50.10 ஆகவும், கிலோவுக்கு ரூ.50,100/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..