தங்கத்தின் விலை உயர்வுக்கு சடன் பிரேக்..! விலை குறைஞ்சாச்சு, தொடர்ந்து குறையுமா?

இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் விலை முதல் முறையாக 25,000 ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் 26,000 ரூபாயையும் தாண்டியது.


ஜூலையில் 2019ல் 900 ரூபாய்க்கு மேல் உயர்ந்து 27,000 ரூபாயை நெருங்கியது. ஆகஸ்டில் 27 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக ரூபாய் 30,000-ஐ கடந்து விட்டது.

நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,784 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 30,272 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,627 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 29,016 ஆகவும் இருந்தது.

ஆனால் இன்று சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து 22 கேரட் தங்கத்தின் விலையானது 3,576 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.28,608 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,733 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 29,684 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:

14.8.2019  - 1 grm – Rs. 3733/-, 8 grm – 29,864/-  ( 24 கேரட்)

14.8.2019 – 1 grm – Rs. 3576/-, 8 grm – 28,608/- (22 கேரட்)

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 47.40 ஆகவும் கிலோ ரூ.47,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..