உன் மனைவியை என்னுடன் தனி அறைக்கு அனுப்பி வை..! உரிமையுடன் கேட்ட நண்பன்..! சம்மதம் தெரிவித்த அஸ்ஸலாம்! திருச்சி பகீர்!

புனித நீரை கொடுப்பதாக கூறி மயக்க மருந்து கலந்து மதபோதகர் நண்பரின் மனைவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமானது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சியில் புகழ்பெற்ற பேருந்து நிலையங்களில் ஒன்று சத்திரம் பேருந்து நிலையம். இதற்கருகில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் முகமது பாரூக் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதபோதகராக அப்பகுதியில் பணியாற்றி வந்தார். இவருடைய நெருங்கிய நண்பரின் பெயர் முகமது அஸ்லாம். முகமது அஸ்லாம் 2008-ஆம் ஆண்டு பர்வீன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் தன்னுடைய மனைவியிடம் தன் வாழ்க்கையில் அனைத்தும் நண்பரான முகமது பாரூக் தான் என்று அஸ்லாம் கூறியுள்ளார். கடந்த சில வருடங்களாக அஸ்லாம் வீட்டில் பணப்பிரச்சனை மற்றும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்த வண்ணமிருந்தன. இதற்கு முடிவு கட்டுவதற்காக அஸ்ஸலாம் தன்னுடைய நண்பரான முகமது பாரூக்கை வீட்டிற்கு வந்து யாசகம் செய்யுமாறு அழைத்துள்ளார்.

அவ்வாறு யாசகம் செய்ய வந்த முகமது பாரூக், "உன் மனைவியிடம் தான் பிரச்சனை உள்ளது. அதனால் தான் உங்களுடைய குடும்பத்தில் அநேக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று புனித நீரை கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்" என்று கூறியுள்ளார். இதனை நம்பி அஸ்லாம் ஒப்புக்கொண்டார்.

அதன் பின்னர் தனி அறைக்கு அழைத்து சென்று புனித நீர் என்ற நீரில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார். இதற்கு முகமது ஃபாரூக் மனைவியும் துணையாவார். அதனை குடித்த பின்னர் மயங்கிய பர்வீனை பலமுறை முகமது பாரூக் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவமானது பலமுறை அரங்கேறியுள்ளது. 

பர்வீனின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அவரைத் தொடர்ந்து தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு ஃபாரூக் மிரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி வீட்டில் இருந்த 25 சவரன் நகை மற்றும் பணம் ஆகியவற்றையும் முகமது பாரூக் மற்றும் அவருடைய மனைவி திருடி சென்றுள்ளனர். புகைப்படங்களை அஸ்லாமிடம் காண்பித்து, தொடர்ந்து தன்னை அனுமதிக்காமல் இருந்தால் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

இதனால் வேறு வழியின்றி அஸ்லாம் முகமது பாரூக்கை அனுமதித்துள்ளார். இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் துன்பங்களை தாங்கி கொள்ள இயலாத பர்வீன் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் நிகழ்ந்தவற்றை கூறி புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் அஸ்லாம், முகமது பாரூக் மற்றும் அவரது மனைவியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்த சம்பவமானது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.