மலைப்பகுதிகளில் சென்று கொண்டிருந்த வேன் மீது பாறைகள் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்த சம்பவமானது உத்தரகண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென சரிந்த மலை! பிளந்த சாலை! கவிழ்ந்த கார்! 5 பேருக்கு நேர்ந்த விபரீதம்!
உத்தரகண்ட் மாநிலத்தில் டீன் டாரா என்று இடம் அமைந்துள்ளது. இது ஒரு மலைகள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் பாறைகள் மிகுதியான அளவில் இருக்கும். வேன் ஒன்று அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
மலை உச்சியில் இருந்த பாறைகள் வேகமாக உருண்டு வந்து கீழே சென்று கொண்டிருந்த வேன் மீது பயங்கரமாக விழுந்தது. வேன் மீது பாறை விழுந்தவுடன் ஓட்டுநர் நிலைதடுமாறினார். துரதிஷ்டவசமாக வேன் தலைகீழாக கீழே விழுந்தது.
இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்து கொண்டிருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது உத்தரகாண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.