சடலமாக கிடந்த முதல் மனைவி! அழுது அலம்பல் செய்த ராணுவ வீரர்! விசாரணையில் தெரிய வந்த 2வது மனைவியின் கர்ப்பம்!

தேனி மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் தன்னுடைய முதல் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேனி மாவட்டத்தில் போடி என்ற ஊர் அமைந்துள்ளது. இந்த ஊரில் முனீஸ்வரன் என்ற ராணுவ வீரர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக சுப்புலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

முனீஸ்வரன் ராணுவ வீரர் என்பதால் பணி நிமித்தமாக ஊரைவிட்டு சென்றுவிடுவார். ஆகையால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆகிய மூவரும் அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக முனீஸ்வரன் பணியில் விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இவர் ஊருக்கு வந்திருந்த நிலையில் நேற்று இரவு திடீரென்று சுப்புலட்சுமி வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறி கதறி அழுதிருக்கிறார் முனீஸ்வரர். இதனையடுத்து அக்கம்பக்கத்து வீட்டினர் உறவினர் என அனைவரும் ஒன்றுகூடி இருக்கின்றனர். இதனைப்பற்றி போலீசாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த போலீசார் சுப்புலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சுப்புலக்ஷ்மியின் பெற்றோர் தங்களது மகளின் மரணத்திற்குப் பின்னால் மர்மம் இருப்பதாக சந்தேகித்து போலீசிடம் புகார் அளித்தனர். 

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்தனர். இந்நிலையில் சுப்புலக்ஷ்மியின் பிரேத பரிசோதனையில் அவரது கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது ராணுவ வீரரான முனீஸ்வரர் ஊருக்கு வந்து செல்லும் பொழுது வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல இவர்களுக்கிடையே இந்த பழக்கம் காதலாக மாறி உள்ளது. பின்னர் முனீஸ்வரன் வீட்டு பெரியவர்கள் அனைவரும் இணைந்து அந்தப் பெண்ணுடன் அவருக்கு இரண்டாவதாக திருமணமும் செய்து வைத்துள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண் கர்ப்பம் அடைந்திருக்கிறார். கர்ப்பம் அடைந்த அந்த பெண்ணுக்கு முனிஷ்வரர் சீமந்தம் செய்து வைக்க வேண்டும் என எண்ணி இருக்கிறார். இதனைப் பற்றி அறிந்து கொண்ட அவரது முதல் மனைவி சுப்புலட்சுமி இதனை குறித்து கண்டித்துப் பேசியிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த முனீஸ்வரர் செய்வதறியாது கழுத்தை நெரித்து இருக்கிறார். உடனே சுப்புலக்ஷ்மி கழுத்தை நெரித்தது மூச்சுமுட்டி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இந்த கொலைக்கு முனீஸ்வரன் பெற்றோர் மற்றும் வீட்டில் உள்ள மற்றவர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இந்த தகவலை விசாரணையின்போது போலீசாரிடம் அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது. இதனைக்கேட்ட போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் முனீஸ்வரர் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார்.

போலீசார் முனீஸ்வரரை வலைவீசி தேடி வருகின்றனர். இரண்டாவது மனைவிக்கு சீமந்தம் நடத்துவதற்காக தன்னுடைய முதல் மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.