திருமணம் செய்து கொண்டால் தனது தோழியை பிரிந்து விடுவோமோ என்ற கவலையில் மணப்பெண் தனது தோழியுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்; பெண்ணுக்கும் பெண்ணுக்கும் தகாத உறவு..? வேறு இளைஞனுடன் திருமணத்திற்கு ஏற்பாடு! பிறகு நிகழ்ந்த பகீர் சம்பவம்!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிபாளையம் என்ற கிராமத்துக்கு அருகே உள்ள கோக்கலை எளையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவியின் பெயர் ஜோதி. 23 வயதாகும் இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ஜோதி தனது கணவரை பிரிந்து பெரிய மணலியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் வசித்து வருகிறார். ஜோதியின் பெற்றோர் கடந்த ஆறு மாதங்களாக கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜோதி அப்பகுதியில் உள்ள தறிப்பட்டறை ஒன்றில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அந்த தறி பட்டறையில் கோட்டப்பாளையத்தை சேர்ந்த 20 வயது பிரியா என்ற திருமணமாகாத பெண்ணும் வேலை செய்து வந்தார்.
வேலை செய்யும் இடத்தில் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதால் இவர்கள் இருவரும் இணைபிரியாத தோழர்களாக மாறினர். இந்நிலையில் வருகின்ற 27-ஆம் தேதி பிரியாவுக்கு திருமணம் நடைபெற இருந்தது. திருமணம் செய்து கொண்டால் நெருங்கிய தோழியான ஜோதியை பிரிந்து விடுவோமோ என்று மணப்பெண் பிரியா மிகுந்த மன வேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் பிரியா தனது தாயிடம் சொல்லிவிட்டு நேற்று காலை ஜோதியின் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு நெருங்கிய தோழிகளான ஜோதி மற்றும் பிரியா இருவரும் ஒரே சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதைப் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.