இந்திய அணியில் இருந்து விலகிய முக்கிய பவுலர்! பைனலில் வெல்லப்போவது யார்? இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் பலப்பரிட்சை!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கட்டாக்கில் நடைபெறவுள்ளது.


இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் நடைபெற்றுவிட்டன. இதில் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும்,  இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதனால் இன்று நடைபெறவுள்ள மூன்றாவது போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே தொடரை கைப்பற்றுவார்கள்.

இந்நிலையில் இந்திய அணியில் இருந்து முக்கிய பந்துவீச்சாளர் தீபக் சஹர் காயம் காரணமாக இன்றைய போட்டியில் இருந்து விலகி உள்ளார் .அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி அணியில் இடம்பெற்றுள்ளார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு அணிகளுக்கும் இடையே நடந்த டி20 தொடரை இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.