’தடுப்பூசி வந்தால் நிம்மதி என பலர் நினைக்கின்றனர். ஆனால், அந்த தடுப்பூசிக்குப் பின்னே இருக்கும் அபாயம் தெரியுமா என்று எச்சரிக்கிறார் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்.
கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா..? ரஜினி பேசுனதை நினைச்சுப் பாருங்க..!
எந்த ஒரு தடுப்பூசியுமே பாதுகாப்பானதில்லை. பக்கவிளைவில்லாத தடுப்பூசி என்று ஒன்றுமே இல்லை.ஒவ்வொரு தடுப்பூசி கண்டுபிடிப்பிற்காகவும் பலியாகின்ற, சோதனைக்கு உட்படுத்தி பாதிப்படைகின்ற லட்சோபலட்ச எளியவர்களின் எண்ணிக்கைக்கு கணக்கு வழக்கில்லை.
ஒவ்வொரு தடுப்பூசியும் பத்து,பதினைந்து ஆண்டுகால டிரையலுக்கு பிறகே ஒரளவு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் காசு பார்க்கும் ஆசையில் அரசுகளுக்கு நெருக்கடி தந்து தங்கள் மருந்தை திணிக்கின்றன.
சமீபத்தில் தன் மன்றத்து நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த் பேசியதை நினைவுபடுத்துகிறேன்; ’’கொரானாவிற்கு தடுப்பூசி ரெடி பண்ணிட்டாங்க, ஆனாலும் அது என் உடம்பிற்கு ஒத்துக் கொள்ளுமா என்பதில் பலத்த சந்தேகம் உள்ளது. அதனால் என்னைப் போல உள்ள ஒருவருக்கு போட்டு டெஸ்ட் பண்ணிட்டு தான் முடிவு சொல்லமுடியும்னு டாக்டர்கள் சொல்றாங்க..’’
இதிலே இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எல்லோர் உடலுக்கும் ஒரே மருந்து ஏற்புடையதல்ல, ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆகவே ரொம்ப முக்கியமானவர்களுக்கு மட்டுமே, இந்த உண்மை பகிரப்படுவதோடு, அப்படிப்பட்டவர்களுக்காக இன்னொரு நபரை பலியாக்கவும் தயங்குவதில்லை மருத்துவர்கள்.
அத்துடன் மற்றொரு விஷயத்தையும் கவனப்படுத்துகிறேன். இதை முதலில் டாக்டர்களுக்கும்,காவல்துறை உயர் நிலையில் இருப்பவர்களுக்கும் போடக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
’’தடுப்பூசியால் பாதிப்படைபவர்களை காப்பாற்ற, பாதிப்பால் கலவரங்கள் உருவானால் அடக்க’’ என்ற காரணங்களுக்காக என்று சொல்லப்பட்டாலும், ’தாங்கள் அதில் பலிகடாவாகக் கூடாது’ என அவர்கள் நினைப்பதே பட்டவர்த்தனமான உண்மையாகும்! அதாவது, தாங்களே நம்பிக்கையாய் ஏற்கமுடியாத ஒன்றைத் தான் அவர்கள் மற்றவர்களுக்கு போடுகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, உலகில் உள்ள சுமார் 200 நாடுகளில் அதிகபட்சம் பத்து நாடுகளே கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன! அதிலும், நான்கு நாடுகளே அதிகம் பாதிப்பு கொண்டுள்ளன. ஆகவே, தற்போது கொரானாவிற்கு தடுப்பூசி என்ற ஒன்று அவசியமா? என்ற கேள்வி எழுந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத் தலைவரே கேள்வி எழுப்பி உள்ளார். மிகப் பல நாடுகளில் கொரானா கட்டுப்பாட்டுடன் தான் உள்ளது.
இந்தியாவிலேயே நமது அனுபவப்படி கொரானாவிற்கு பலியானவர்களில் சுமார் 95 சதவிகிதமானவர்கள் ஏற்கனவே சில நோய்களில் பாதிக்கப்பட்டதால் தான் பலியானார்கள். கொரானாவில் பலியானவர்களை விட குணமானவர்கள் எண்ணிக்கை பலமடங்கு என்பது தெளிவாகிறது. கொரானா வராமல் தவிர்க்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதுமான பாரம்பரிய உணவு பழக்க,வழக்கங்களை அனுசரித்து, கொரானாவை முறியடிக்கும் வாழ்க்கை முறைகளை மக்கள் கைகொள்ள தொடங்கிவிட்டனர்.
ஆகவே, கொரானாவைக் கொண்டு கொலைகார கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க நாம் துணைபோகக் கூடாது.கொரனாவிற்கு தடுப்பூசி என்று வந்தால், அதை விருப்படுபவர்களுக்கு மட்டுமே போட வேண்டும்.அனைவருக்குமாக திணிக்க கூடாது என்பதில் நாம் உறுதிகாட்ட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.