கார் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் உட்பட 2 பேர் பலியான சம்பவமானது ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிவேகத்தில் வந்த கார்! ஓரமாக ஒடித்த டிப்பர் லாரி! ஆனாலும் நிகழ்ந்த பயங்கரம்! பதைபதைப்பு விபத்து!
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட வீரையா நகர் எனும் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய வயது 80. கும்பகோணத்தில் வசித்து வரும் தன்னுடைய நண்பர் பொன்னுசாமியின் மகனான ராஜராஜன் என்பவருடன் விருதாச்சலத்திலிருந்து கும்பகோணம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, விருதாச்சலம் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி கார் மீது மோதியுள்ளது. மோதிய அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டுடெடுக்க முயற்சித்தனர். இயலாததால், தீயணைப்பு படையினரின் உதவியை காவல்துறையினர் நாடினர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் உடல்களை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.