தஞ்சை பெரிய கோயிலில் பிரகாரங்களில் அமரும் சில காதலர்கள் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
ஷால்களை எடுத்து விடு..! கைகளை உள்ளே விடு..! தஞ்சை பெரிய கோவிலுக்குள் காதலர்களின் காமக் களியாட்டம்!
தஞ்சை பெரிய கோயில் உலகப் பாரம்பரியச் சின்னம் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்டதாக திகழ்கிறது. கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் மாமன்னர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டினார்.
1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன. இக்கோயில் தமிழகத்தின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO)உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இக்கோவிலுக்குள் வரும் வரும் காதலர்கள் சிலர், கோவில் பிரகாரங்களில் அமர்ந்து சேட்டைகளில் ஈடுபடுவதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பிரகார தூண்கள் மறைவிடத்தில் தஞ்சம் அடையும் ஜோடிகள் சிலர், மிக நெருக்கமாக அமர்ந்து சில்மிஷத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுவதாக புகார் தெரிவிக்கும் பொதுமக்கள், இதனை தடுத்து நிறுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சென்னைவாசி ஒருவர் காதலர்களை தட்டி கேட்டதற்கு, உங்களுக்கென்ன நீங்கள் சந்தோஷமாக இருக்க பெரிய கடற்கரையான மெரினா இருக்கிறது. தஞ்சையில் ஏது கடற்கரை என்று சொன்னதால் சென்னைவாசி ஏதும் பேசாமல் திரும்பி வந்துவிட்டாராம். நியாயம்தானே?