தலையில் வழுக்கை விழுந்த நபரொருவர் ட்ரிக் செய்திருக்கும் வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி..! தன் கணவனுக்கு இந்த மனைவி கொடுத்த அசர வைக்கும் விஷயம்! வைரல் வீடியோ உள்ளே!
நவீன காலத்தில் தலைமுடி உதிர்தல் என்பது வழக்கமானதாகிவிட்டது. பெண்கள் ஆண்கள் என்று இருபாலருக்குமே இந்த தொந்தரவு தற்போதைய உலகில் பொதுவானதாக கருதப்படுகிறது.
தலைமுடி உதிர்தல் பிரச்சனை உடையவர்கள் பெரும்பாலானோர் மிகவும் வருத்தப்படுவர். எப்படியாவது சரி செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவார்கள். மற்றொரு சாரார் தங்களுடைய விதிப்படி நடக்கிறது என்று எண்ணிக்கொண்டு வாழ்க்கையல நடத்துவர்.
மேற்கூறப்பட்ட 2-வது ரகத்தை சேர்ந்தவர் சமீபத்தில் ஒரு ட்ரிக் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த வீடியோவின் தொடக்கத்தில் அவர் தன்னுடைய மனைவியின் தோளில் சாய்ந்து கொண்டிருந்தார். 7 வினாடிகள் கழித்த பின்னர் இருவரும் தங்களுடைய தலைகளை பிரிக்கின்றனர். அப்போதுதான் அந்த ஆணுக்கு வழுக்கை தலை என்பது தெரியவருகிறது. அதுவரை அவர் தன்னுடைய மனைவியின் முடியை தன் தலையில் ஏந்தியிருந்துள்ளார்.
இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.