சாலையோரம் இருந்த மின்சாரம் கம்பியை மிதித்த இளைஞன் உயிருக்கு போராடி வரும் சம்பவமானது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் ஓரமாக நடந்த இளைஞர்! வெளியே நீட்டிக் கொண்டிருந்த மின்வயர்! நொடியில் நேர்ந்த பயங்கரம்!
மும்பை புறநகரில் நவிமும்பை எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட கைபர்கர்ணே என்ற பகுதியில் சுபம் சோனி என்ற இளைஞர் நடந்து கொண்டிருந்தார். அவர் நடந்து கொண்டிருந்த சாலையோரத்தில் பூமிக்கு அடியில் மின்சார கம்பிகள் செலுத்த பட்டிருந்தன. கம்பிகள் சற்று வெளியே நீட்டிக்கொண்டிருந்தன.
இதனை கவனிக்காத சுபம் கம்பியை மெதித்துள்ளார். மிதித்த அடுத்த நொடியே அவருடைய உடலில் மின்சாரம் பாய்ந்தது. பின்னர் அவர் மீது தீப்பற்றி கொண்டது. தீ அவருடைய பேண்டில் வேகமாக வெப்பம் தாங்காமல் அவர் ஓடியுள்ளார். தன்னை காப்பாற்றுமாறு கத்திக்கொண்டே ஓடினார்.
அருகிலிருந்த பேரலில் இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளார். அவருடைய அலறல் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர் மின்சார கம்பியை மிதித்தவுடன் தீப்பற்றிய சம்பவத்தின் வீடியோவானது சிசிடிவி கேமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 25% தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சுபம் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.