கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டது. ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்ல தயாராகி கொண்டு வருகிறார்கள்.
சாமியே சரணம் ஐயப்பா! சரணம் என்பதன் பொருள் அறிந்து சொல்லி சரணடையுங்கள்!
அவ்வாறு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் சாமி சரணம் என்று அடிக்கடி கூறுவார்கள். அதில் சரணம் என்ற சொல்லிற்கு என்ன பொருள் என்று தெரிந்து கொள்வோம்.
சுவாமி என்ற உச்சரிப்பின் வெளிப்பாட்டினால் சொல்லி படிப்பவர்களுக்கு சுபம் உண்டாகிறது.
'ச" என்ற எழுத்திற்கு நம்மிடம் உள்ள காமக் கிராதிகள் எனும் சாத்தான்களை அழிக்கும் சத்தசம்காரம் என்று பொருள்.
'ர" என்ற எழுத்திற்கு ஞானத்தைத் தரவல்லது என்று பொருள்.
'ண" என்ற எழுத்திற்கு சாந்தத்தைத் தரவல்லது என்று பொருள்.
'ம்" முத்ரா என்ற எழுத்திற்கு துக்கங்களைப் போக்கவல்லது. சுவாமிக்கு மகிழ்ச்சி தரக்கூடியது.
ஆகையால், நம்முடைய நாபி கமலத்தில் இருந்து எழும் பிராண வாயுவை இதய மார்க்கமாகச் செலுத்தி, நாவின் மூலம் சப்தமாக உயிர்ப்பித்து 'ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா" என ஒலிக்கும்போது, மூல மந்திர ஒலியுடன் நம் காமக் கிராதிகளை அழித்து ஞானத்தை தர ஐயப்பனை சரணடைகிறோம் என்று பொருள்.
ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும்போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம் :
அருணோதய ஸங்காசம் நீல குண்டலதாரிணம்
நீலாம் பரதரம் தேவம் வந்தேகம் பிரம்ம நந்தனம்
சாப பானம் வாம ஹஸ்தே ரௌப்பிய வேத ரஞ்ச தக்ஷிணே
விலசத் குண்டல தரம் வந்தேகம் விஷ்ணு நந்தனம்
வியாக் ராரூடம் ரக்த நேத்ரம் ஸவர்ண மால விபூஷ்ணம்
வீர பட்டதரம் கோரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்
கிங்கிண் யொட்டியாண பூஷேஷம் பூர்ண சந்திர நிபானணம்
கிராத ரூபா சாஸ்தாரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்
பூத வேதாள ஸம்ஸேயம் காஞ்சனாத்ரி நிவாஸினம்
மணிகண்ட மிதிக் யாதம் வந்தேகம் சக்தி நந்தனம்.