1.75 லட்ச படத்தை உரிய நபரிடம் ஒப்படைத்த சிறை கைதிகளுக்கு கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்திருப்பது புதுக்கோட்டையில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டு கட்டாக ரூ.2000 நோட்டு! கேட்பாரற்று கிடந்த ரூ.2 லட்சம்! கண்டெடுத்த ஆயுள் தண்டனை கைதிகள் செய்த நெகிழ்ச்சி செயல்!
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_14288_1_medium_thumb.jpg)
புதுக்கோட்டையில் இயங்கிவரும் பெட்ரோல் பங்கில் ஆயுள் தண்டனை கைதிகள் பணியாற்றி வருகின்றனர். 10-ஆம் தேதியன்று இந்த பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்புவதற்காக ஜானகிராமன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். பெட்ரோல் நிரப்பி விட்டு சென்ற அவர் தன்னிடமிருந்த பணப்பையை பெட்ரோல் பங்கிலே விட்டு சென்றுள்ளார். அந்த பணப்பையில் 1.75 லட்சம் ரூபாய் இருந்துள்ளது.
இதனை கண்ட ஆயுள் தண்டனை கைதிகளான கார்த்திக், சிவகுமார், புஷ்பராஜ் ஆகியோர் பணப்பையை பத்திரமாக மீட்டெடுத்து சிறைத்துறை கண்காணிப்பாளரான ருக்மணி என்பவரிடம் ஒப்படைத்தனர். ருக்மணி பணப்பையை விட்டு சென்ற ஜானகிராமன் நேரில் அழைத்து பணப்பையை பத்திரமாகத் திருப்பி கொடுத்தார். அதன் பின்னர் கார்த்திக் சிவகுமார் புஷ்பராஜ் ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்த செய்தியானது புதுக்கோட்டையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.