ஓடும் லாரியிலிருந்து காற்றில் பணம் பறந்து வந்து ரோட்டில் விழுந்த சம்பவமானது அமெரிக்கா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு கொட்டித் தீர்த்தது கனமழை இல்லை! பண மழை! ஆனந்த அதிர்ச்சியில் பொதுமக்கள் செய்த செயல்!
அமெரிக்கா நாட்டில் ஜார்ஜியா மாகாணம் அமைந்துள்ளது. இங்க சில நாட்களுக்கு முன்னர் அதிவேகத்தில் லாரி ஒன்று பணத்தை மூட்டை கட்டி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராவிதமாக லாரியிலிருந்து அமெரிக்க டாலர் பண நோட்டுகள் காற்றில் பறந்துகொண்டிருந்தன.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரோட்டில் சென்ற மக்கள் தங்கள் வாகனத்தை நிறுத்தி பணத்தை எடுத்து கொண்டனர். சம்பவம் நடந்த போது அங்கிருந்த பொதுமக்கள் பண மழையில் நனைந்துள்ளனர். சிலர் இந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவுவதை கண்ட ஜார்ஜியா மாகாண காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பண நோட்டுகள் காற்றில் பறந்து கொண்டிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் விசாரணை நடத்தியதில், ஜார்ஜியா சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த லாரியிலிருந்து 1,75,000 அமெரிக்க டாலர்கள் பறந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இந்திய ரூபாய் மதிப்பில் 1.2 கோடி ரூபாயாகும். பலர் சமூக வலைதளங்களில் தாங்கள் அந்த சாலையில் சென்றிருக்க கூடாதா என்று நினைத்து ஏங்கியுள்ளனர்.