பொள்ளாச்சி கும்பலை மிஞ்சும் வகையில் இளம் பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டி வந்த நாகை டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலிகள் 5 பேரின் ஆபாச வீடியோ! பொள்ளாச்சி கும்பலை மிஞ்சிய நாகை கால் டாக்சி டிரைவர்!
இளம் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பொள்ளாச்சி கும்பலை மிஞ்சும் வகையில் நாகையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
நாகையைச் சேர்ந்த வர் சுந்தர். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். நாகை பேருந்து நிலையத்திலிருந்து பெரும்பாலும் கல்லூரி மாணவிகளை கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் வேலையை சுந்தர் செய்து வந்தார்.
இப்படி தனது ஆட்டோவில் வரும் மாணவிகளை தனது பேச்சால் மயக்கி அவர்களை காதல் வலையில் விழுவது சுந்தருக்கு கைவந்த கலை. அந்த வகையில் இளம்பெண் ஒருவரை தனது காதல் வலையில் வீழ்த்தி தன்னுடைய இச்சைகளை தீர்த்து வந்துள்ளார் சுந்தர்.
இளம் பெண்ணும் காதலர் தானே என்று சுந்தருடன் நெருக்கமாக இருக்கும்போது புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அதன் பிறகுதான் சுந்தர் தனது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார். இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி மிரட்டியே அவரை அவ்வப்போது உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென சுந்தர் நாகையில் இருந்து சென்னைக்கு கால் டாக்ஸி ஓட்டுனர் ஆக சென்றுவிட்டார். பொள்ளாச்சி வீடியோ விவகாரம் வெளியானவுடன் பயந்துபோன அந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பெற்றோரிடம் கூறி நாகை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விரைந்து செயல்பட்ட போலீஸ் சென்னை வந்து சுந்தரை கைது செய்தது. சுந்தரின் செல்போனை ஆய்வு செய்த போது தான் அந்த செல்போனில் புகார் அளித்த பெண் தவிர மேலும் நான்கு பெண்களின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்தது தெரிய வந்தது.
நாகையில் புகார் அளித்த இளம் பெண்ணைப் போலவே மற்ற நான்கு பெண்களையும் காதல் வலையில் வீழ்த்தி அவர்களுடன் நெருக்கமாக இருக்கும்போது புகைப்படங்களை எடுத்து சுந்தர் மிரட்டி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சுந்தரை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ் சுந்தரால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களிடமும் புகார் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பொள்ளாச்சியில் ஆவது கும்பலாக சேர்ந்து பெண்களை ஏமாற்றிய ஆனால் சுந்தர் ஒரே ஆளாக 5 பெண்களை ஏமாற்றி மிரட்டி வந்துள்ளார்.