இயக்குனர் விக்னேஷ் சிவன் , தன்னுடைய காதலியான நடிகை நயன்தாராவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியதை அடுத்து அவர் கர்ப்பமாக இருக்கிறாரா? என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திருமணத்திற்கு முன்னரே நயன்தாரா கர்ப்பம்? விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட் இதற்குத்தானா? கோடம்பாக்கம் கிசுகிசு!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்து இருந்தார். இதன் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட பின்னர் இவர்களுக்கு இடையே இருந்த நட்பு காதலாக மாறியது. இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். அன்னையர் தினத்தையொட்டி இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவுக்கு தன்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதாவது விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள அந்த பதிவில் , நடிகை நயன்தாரா கையில் ஒரு அழகிய குழந்தையை வைத்துக்கொண்டு இருக்கும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டு மேலும் அதற்கு கேப்ஷனாக "எதிர்காலத்தில் எனக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளின் அம்மாவின் கைகளில் இருக்கும் குழந்தையின் அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்" என்று கூறியிருந்தார். இந்த பதிவை வெளியிட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே பல லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்தது. நெட்டிசன்கள் பலரும் நடிகை நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் சிலர் எப்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் இதைப்பற்றி இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.