கல்லூரி மாணவிகளை தங்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டவர்களின் விவரங்களை விரைவில் வெளியிட உள்ளதாக நிர்மலா தேவி கூறியுள்ளார்.
மாணவிகளை வைத்து விபச்சாரம்! யார் யாருக்கு தொடர்பு? நிர்மலா தேவி வெளியிட்ட ரகசியம்!
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவியை, அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இன்று சந்தித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர்
கூறியதாவது:
சிபிசிஐடி விசாரனையின் போது நிர்மலா தேவிக்கு உடல்
நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. என்னிடம் கூறிய பிறகு
நான் நீதிமன்றத்தில் முறையிடுவேன் என்றேன்.
பின்னர் பெயரளவிற்கு மதுரை அரசு மருத்துவமனையில் நிர்மலா தேவியை சிகிச்சைக்க சேர்த்துள்ளனர். அப்போது அங்கு மப்டியில் காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் வந்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வைத்து ஏன் பேசினாய் என்று கேட்டு அந்த அதிகாரி
மிரட்டியுள்ளார்.
தனக்கு ஜாமீன்
கொடுக்காமல் இழுத்தடிப்பது ஏன்? என்று கடந்த முறை நீதிமன்றம் வந்த போது
ஸ்ரீவில்லிபுத்தூரில் வைத்து நிர்மலா தேவி கேட்டார். இதனை தொடர்ந்து அவருக்கான
மிரட்டல்கள் அதிகரித்துள்ளன. நிர்மலா தேவிக்கு ஆதரவாக இருக்க வேண்டாம் என்று அவரது
உறவினர்களை போலீசார் மிரட்டுகின்றனர்.
மேலும் மதுரை
மருத்துவமனையில் நிர்மலா தேவியை சந்தித்த பெண் உயர் அதிகாரி நிர்மலாதேவியிடம் , வரும் நாடாளுமன்றம் தேர்தல் வரை பத்திரிக்கையார்களையோ, ஊடகத்தினரையோ, மற்றவர்களையோ சந்திக்கக் கூடாது என மிரட்டியிருக்கிறார்.
ஊடகங்களிடம் பேசாமல்
இருந்தால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஜாமீன் கிடைக்கும், வழக்கில் இருந்து
விடுதலை பெறலாம் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார். இப்போது கூறுகிறோம் இந்த
விவகாரத்தில் அந்த பெரிய மனிதருக்கு நேரடி தொடர்பு உள்ளது. விரைவில் ஜாமீன்
கிடைக்க ஒத்துழைக்கவில்லை என்றால் அடுத்த முறை நீதிமன்றம் வரும் போது நிர்மலா தேவி
பலரது பெயர்களை வெளியிடுவார்.
அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதால் தான் நிர்மலாவுக்கு தொடர்ந்து ஜாமீன் கிடைக்க விடாமல் செய்கின்றனர்.
இவ்வாறு பசும் பொன்
பாண்டியன் கூறியுள்ளார். எனவே அடுத்த முறை நிர்மலா தேவி நீதிமன்றம் வரும் போது
பெரிய அளவில் பட்டாசு வெடிக்கப்போகிறது.