பிரபல பாலிவுட் நடிகையான தாப்ஸி, நடிகர் அஜித் நடித்த "நேர் கொண்ட பார்வை" படத்தில் தான் ஏன் நடிக்கவில்லை என்று கூறியிருப்பது கோலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்துடன் நடிக்க கூப்டாங்க..! நான் முடியாதுனு சொல்லிட்டேன்..! டாப்ஸி வெளியிட்ட ரகசியம்!
தாப்சி பன்னு முன்னணி கோலிவுட் நடிகர்களில் ஒருவராவார். தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷ் நடித்த "ஆடுகளம்" படத்தில் கதாநாயகியாக நடித்து பெரும் புகழ் அடைந்தார். இவர் தெலுங்கு படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் அவரிடம் நடந்த நேர்காணலின் போது, நேர்கொண்ட பார்வை படத்தில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "நேர்கொண்ட பார்வை படத்தில் எனக்கு முதலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் இல்லை.
மன உறுதியை சோதித்துப் பார்க்கும் அத்தகைய படத்தில் இந்த காலத்தில் என்னால் நடிக்க இயலாது. இந்த மாதிரி எமோஷனலான படங்களை முன்னர் நடித்துள்ளேன். ஆனால் இப்போதைக்கு அது போன்ற வலினையான கதைக்களம் கொண்ட கதாபாத்திரங்களீல் நடிக்கும் அளவிலான வலிமை என்னிடம் இல்லை. பிற்காலத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தால் அதனை ஏற்றுக்கொள்வேன்" என்று பதிலளித்தார்.
நேர்கொண்ட பார்வை படமானது மறைந்த திரையுலக பிரபலமான ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் வெளிவர உள்ளது. இந்தப் படத்தில் அஜித் குமார்,அபிராமி ஐயர், ஆண்ட்ரியா, ஆதிக் ரவிச்சந்திரன், "தந்தி டிவி புகழ்" ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டாப்ஸியின் இந்த பேட்டியானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.