தேனி பெரியகுளத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அசைவ உணவு கடையில் முதல் நாளில் கூட்டம் அலைமோதி உள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பரோட்டா 1 ரூபாய்! பிரியாணி 10 ரூபாய்! அசைவ ஹோட்டலில் அலைமோதி ஆர்ப்பரித்த கூட்டம்! எங்கு தெரியுமா?
புதிதாக திறக்கப்படும் ஜவுளி கடைகள் மற்றும் உணவகங்களில் முதல் நாளில் கூட்டத்தை இருப்பதற்கு பல வகையான சலுகைகள் அறிவிக்கப்படும். பெரியகுளம் பவளம் தியேட்டர் அருகில் புதிதாக ஒரு அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இன்று புதிதாக திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தில் 1 ரூபாய்க்கு பரோட்டாவும், 10 ரூபாய்க்கு பிரியாணியும் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை அறிந்த அப்பகுதி மக்கள் பரோட்டாவையும் பிரியாணியையும் அள்ளுவதற்காக உணவகத்தில் அலைமோதினர். கட்டைகளை கொண்டு அப்பகுதியில் கூட்ட நெரிசலை அடக்கினர். சாலையில் நெரிசல் ஏற்பட்டதால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிந்தனர்.
பரோட்டா மற்றும் பிரியாணியை ருசித்த பொதுமக்கள் சுவையை சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர். ஒரு ரூபாய்க்கு புரோட்டாவும், 10 ரூபாய்க்கு பிரியாணியும் இன்று ஒரு நாள் மட்டும்தானாம். அதனால் சாப்பிட்டு முடித்துவிட்டு மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.