கொரோனா தொற்று குறித்து ஆய்வு நடத்துவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்திவருகிறார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க மக்கள் கோரிக்கை..! நிறைவேற்ற உறுதி கொடுத்த முதல்வர் எடப்பாடி
மதுரை, தேனி, நெல்லை, சேலம் போன்ற நகரங்களையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியபிறகு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், புதிய திட்டப் பணிகளையும் துவங்கி வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.
தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்று குறைந்துவருகிறது. இப்போது கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்கை முடங்கி உள்ளது. உலக நாடுகள் கொரோனா அச்சத்தில் உள்ள நிலையில், தமிழகம் கொரோனா தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. வெற்றிபெற்றும் வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். அதேபோன்று விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கால்நடை வளர்ப்போருக்காக கலப்பின பசுக்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உதகையில் ரூ.48 கோடி மதிப்பில் கால்நடை விந்தணு ஆராய்ச்சி மையம் அமையவுள்ளதாகவும் அறிவித்தார்.