தெலுங்கு சினிமாவில் லக்கி நடிகையாக வலம் வரும் பிரபல நடிகை தற்போது தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.
வயது 24 தான்..! அதற்குள் எல்லாவற்றையும் பார்த்த லக்கி நடிகை தற்போது எடுத்த முடிவு..! கோடம்பாக்கம் கிசுகிசு!

24 வயதாகும் இந்த லக்கி நடிகை தெலுங்கு திரை உலகில் லோ பட்ஜெட் திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கு திரை உலகில் இதுவரை நான்கு திரைப் படங்களில் மட்டுமே நடித்துள்ள அவர் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டுள்ளார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டது. இதன் மூலம் கோலிவுட் ரசிகர்களையும் கவர்ந்து மீண்டும் லக்கி நடிகையாக வலம் வருகிறார். தொடர்ந்து இவர் நடித்த எல்லா திரைப்படங்களும் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளதால் நடிகை திடீரென்று புதிய முயற்சியை கையாண்டுள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது இந்த நடிகையை ஒரு மீடியம் லெவல் பட்ஜெட் திரைப்படத்தில் நடிப்பதற்காக அழைத்த பொழுது அவர் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது தெரிய வந்தது. அதாவது டாப் லெவல் ஹீரோயினாக வலம் வர வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் அவருடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தமிழ் ,தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களாக வலம் வரும் பலரும் அதிகமான சம்பளத்தை பெற்று வரும் நிலையில் தற்போது திரை உலகில் அறிமுகமாகி சில படங்களில் நடித்திருக்கும் இந்த லக்கி நடிகை தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளது தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.