ராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன் மிரட்டல்..?

நாடு முழுவதும் உள்ள 181 துணை வேந்தர்களை ராகுலுக்கு எதிராக கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இதனை தேர்தல் கமிஷன் கையில் எடுத்து ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நாடு முழுவதும் உள்ள 181 துணை வேந்தர்களை ராகுலுக்கு எதிராக கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இதனை தேர்தல் கமிஷன் கையில் எடுத்து ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட துணை வேந்தர்கள், கல்வியாளர்கள் இணைந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு. ‘ஒளி தருபவர்கள் எரியூட்டப்படுகிறார்கள்’ என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

அந்தக் கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அண்மையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் பற்றி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அதில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பலரும் ஒரு குறிப்பிட்ட அமைப்புடன் சார்பு கொண்டிருப்பதாலேயே அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதாகக் கூறியிருக்கிறார். உண்மையில் துணை வேந்தர்கள் தேர்ந்தெடுக்கப்படும் செயல்முறையானது தகுதி, புலமை மற்றும் ஒருமைப்பாடு போன்ற மதிப்பீடுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அவ்வாறாக தேர்ந்தெடுக்கப்படும் நாங்கள் அறிவின் பாதுகாவலர்களாக, கல்வித் துறையின் நிர்வாகிகளாக நிர்வாக ஒருமைப்பாடு, நெறிமுறை, நடத்தை ஆகியவற்றின் உச்ச நிலைகளைப் பேணுவதில் உறுதியுடன் செயல்படுகிறோம். ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக ராகுல் காந்தி துணை வேந்தர் பதவியையே இழிவுபடுத்தும் வகையில் உண்மைக்குப் புறம்பானவற்றைப் பேசியுள்ளார். அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கோரி இருக்கிறார்கள்.

இதெல்லாம் தேர்தல் கமிஷன் கண்களில் உடனே பட்டுவிடும் என்பதால் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவரது தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.