குழந்தை ரெடி

தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளியே வர தயாராகிவிட்டதா என்பதை ஒவ்வொரு கர்ப்பிணியும் அறிந்துகொள்ள முயல வேண்டும். அப்போதுதான் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று, எந்த சிக்கலும் இல்லாமல் குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்க முடியும்.


·         கர்ப்பத்தில் கடைசி வாரத்தில், கருப்பையின் உச்சியானது முன்புறமாக சாய்வதால், உதரவிதானத்தின் மீதான கருப்பை அழுத்தம் குறைகிறது. இதனால் கர்ப்பிணியால் நன்றாக மூச்சுவிட முடியும்.

·         கர்ப்பத்தின் இறுதியில் கருப்பையின் சுருக்கத்தை ஒவ்வொரு பெண்ணாலும் நன்றாக உணர முடியும். அடி வயிற்றில் மிதமான வலியை உணர்வார்கள்.

·         சிசுவின் தலைப்பகுதி கருப்பை வாசலை நெருங்குவதை வயிற்றை தொட்டுப்பார்த்தே தாயால் உணரமுடியும்.

·         பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து சளித்திரவம் வெளிவருவது, பிரசவம் தொடங்கயிருப்பதன் தெளிவான அறிகுறியாகும்.

அவ்வப்போது தோன்றும் அடிவயிற்று வலியானது, அடிக்கடி தோன்றுவதும் பிரசவ வலி ஏற்பட இருப்பதன் அறிகுறி ஆகும். இந்த அறிகுறிகளை கர்ப்பிணி தெளிவாக அறிந்திருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்க முடியும்.