66 வயதில் காதல்! 35 வயது அழகியை 2வதாக மணக்கிறார் விளாடிமிர் புதின்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் 2வது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்று ரஷ்யா. சர்வதேச அளவில் அமெரிக்காவிற்கு தற்போதும் சிம்மசொப்பமான திகழும் ரஷ்யாவின் அதிபராக கடந்த 2000மாம் ஆண்டு பதவி எற்றார். அன்று முதல் தற்போது வரை ரஷ்யாவின் மாபெரும் தலைவர்களுள் ஒருவராக புதின் திகழ்ந்து வருகிறார்.

   இடையில் அரசியல் நெருக்கடி வந்த போது தனக்கு நெருக்கமான டிமிட்ரி மெத்வதேவை அதிபராக்கிய புதின் தான் பிரதமராக பதவி வகித்து வந்தார். பின்னர் 2012ம் ஆண்டு மீண்டும் ரஷ்ய அதிபரான புதின், அதுநாள் வரை அதிபராக இருந்த மெத்வதேவை மீண்டும் ரஷ்ய பிரதமர் ஆக்கினார். இப்படி ரஷ்ய அரசியலையே தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள புதின் தான் தனது 66வது வயதில் காதல் வயப்பட்டுள்ளார்.

  இவர் கடந்த 1983ம் ஆண்டு லயூட் மிலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கேத்ரினா, மரியா என இரண்டு மகள்கள் உண்டு. இருவருமே தற்போது கிட்டத்தட்ட 30 வயதை நெருங்கிவிட்டனர். கடந்த 2013ம் ஆண்டு தனது மனைவி லயூட் மிலாவை பிரிவதாக புடின் அறிவித்தார். அதனை தொடர்ந்து 2014ம் ஆண்டு இருவருக்கும் முறைப்படி விவாகரத்து கிடைத்தது.

   கிட்டத்தட்ட 30 ஆண்டுகால தாம்பத்ய வாழ்க்கையை புடின் முறித்துக் கொண்டவதற்கு ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒருவருடான காதல் தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலை புதின் உறுதிப்படுத்தாமல் இருந்து வந்தார். ஆனால் புதின் ஓய்வெடுக்க தனது சொகுசு இல்லங்களுக்கு செல்லும் போது தன்னுடன் அந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவாவை உடன் அழைத்துச் சென்று வந்தார்.

   இந்த நிலையில் தான் மீண்டும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக புதின் தெரிவித்துள்ளார். யாரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக புடின் கூறவில்லை. ஆனால் எலினாவை தான் புதின் திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக எலினாவுடன் சேர்ந்தே வாழ்ந்து வரும் புதின் அதனை திருமண உறவாக மாற்ற முடிவெடுத்துள்ளார்.

   எலினாவுக்கு தற்போது 35 வயது ஆகிறது. அதாவது புதினுக்கு முதல் திருமணம் நடைபெற்ற வருடத்தில் தான் எலினா பிறந்துள்ளார். அவரைத்தான் புதின் தற்போது 2வதாக திருமணம் செய்து கொள்ள உள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள எலினாவை பாராட்ட அதிபர் மாளிகைக்கு வரவழைத்த போது தான் அவர் மீது புதினுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது காதலாகி தற்போது திருமணத்தில் முடிய உள்ளது.