தொழில் அதிபர் மகளுடன் மலர்ந்த காதல்! பிறகு விஜய்க்கு எத்தனை முறை திருமணம் நடந்தது தெரியுமா? இதுவரை வெளிவராத தகவல்!

பிரபல நடிகர் விஜய்யின் திருமணம் பற்றி இதுவரை வெளிவராத சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.


நடிகர் விஜய் தனது தீவிர ரசிகையான சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நடிகர் விஜய்யின் திருமணத்தை பற்றி யாரும் அறிந்திடாத பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. லண்டனில் வசித்து வந்த தொழிலதிபர் மகளான சங்கீதா நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து வந்தார். நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பூவே உனக்காக திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது சங்கீதா நடிகர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார்.

லண்டனில் தங்கியிருந்த சங்கீதா ஒவ்வொரு ஆண்டும் சென்னை வரும்போது நடிகர் விஜய்யின் குடும்பத்தினரை சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்படி ஒருமுறை சென்னை வந்தபோது நடிகை விஜய்யின் பெற்றோர்கள் விஜய்யை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று சங்கீதாவிடம் கேட்க உடனடியாக அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். நடிகர் விஜயிடம் கேட்ட போது அவரும் பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இவ்வாறு நிச்சயமானது தான் நடிகர் விஜய் - சங்கீதாவின் திருமணம்.

இதனையடுத்து லண்டனில் பெற்றோர்களின் முன்னிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு இருவரும் கிட்டத்தட்ட ஒன்பது மாதம் பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளனர். இதன் பின்னர் 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. 

முதல்நாள் பிரபலங்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இரண்டாவது நாள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த 60 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றிக் கொண்டுள்ளனர். இவர்களது திருமணத்தை காண ரசிகர்கள் நான்கு பிரிவுகளாக அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக நடிகர் விஜய் சங்கீதா ஜோடி நான்கு முறை ரசிகர்களுக்காக மாலை மாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.