மனைவி! மகனுடன் அத்திவரதரை தரிசிக்க சென்றாரா சீமான்! வைரல் புகைப்படத்தின் உண்மை நிலை இது தான்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் பிரபல கோலிவுட் நடிகரும் இயக்குனருமான சீமான் அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதர் கோவிலுக்கு சென்று பெருமாளை வழிபட்டு உள்ளதாக கூறப்படும் செய்தியை போலியானது என்று சமூகவலைதளங்களில் கூறப்படுகிறது.


40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரத்தில் நிலை பெற்றுள்ளார். 3 வாரங்களுக்கு முன்னிருந்து அத்திவரதரின் பெருமையை உலகெங்கும் பரவ தொடங்கியுள்ளது. அத்தி வரதர் in மகிமையை உணர்ந்த நாட்டின் பல்வேறு ஆளுமைகள் காஞ்சிபுரத்திற்கு படையெடுத்து வருகின்றனர். 

இதனை மெய்ப்பிக்கும் வகையில் சில தினங்களுக்கு முன்னர் இந்திய நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் அத்திவரதரை தரிசிப்பதற்கு காஞ்சிபுரம் வந்தடைந்தார். இதற்கிடையே இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அவர்கள் அத்திவரதரை தரிசிப்பதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ளதாக நம் தொடர்புகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் அத்திவரதரை தரிசிப்பதற்கு மனைவியுடன் சென்றதாக புகைப்படங்கள் வெளியாகின. கடவுள் பக்தியை சாடும் சீமான் எவ்வாறு அத்திவரதரை தரிசிக்க போகலாம்? என்று பல்வேறு வலதுசாரிகள் வலைத்தளங்களில் வறுத்து எடுத்து வந்தனர். 

அந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை வெளியாகியுள்ளது. அதாவது முன்னாள் தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகருமான காளிமுத்துவின் கண்ணீர்  அஞ்சலி நிகழ்ச்சிக்கு சீமான் மற்றும் அவரது மனைவி சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வண்ணம் காரணமாக பல்வேறு வலதுசாரிகள் திருத்தி செய்தியை பரவியுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அரசியல் காழ்ப்புணர்ச்சி இவ்வளவு கீழ்த்தரமாக செயல்படுகிறது என்று பல்வேறு கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.  இந்த உண்மையானது நாம் தமிழர் கட்சியினருக்கு நிம்மதியை அளித்துள்ளது.