குளியல் அறை சுவற்றில் ரத்தத்தில் ஆண் பெயர்! மாயமான பெண்மணி வழக்கில் திடீர் திருப்பம்! சேலம் திகுதிகு!

குளியலறையில் ரத்தத்தால் பெயரை எழுதி வைத்துவிட்டு பெண்ணொருவர் மாயமான சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் கன்னங்குறிச்சி எனும் இடம் உள்ளது. இங்கு ஹரிகிருஷ்ணன் என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார். இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. அதன் பின்னர் அந்த பெண்ணை பிரிந்தார். 13 ஆண்டுகளுக்கு முன்னர் வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணின் பெயர் தமிழ்ச்செல்வி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளான். 

இந்நிலையில் சென்ற வாரம் தமிழ்செல்வி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் குளியலறையில் "விமல் ஆளுங்க!! விட்டுடாதீங்க" என்று ரத்தத்தால் எழுதப்பட்டிருந்தது. இரவு தாமதமாக வீட்டிற்கு திரும்பிய ஹரிகிருஷ்ணன் தமிழ்ச்செல்வி தேடியுள்ளார். அப்போது குளியலறையிலிருந்த வாசகத்தை பார்த்து ஹரிகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார். 

உடனடியாக அப்பகுதி காவல்நிலையத்தில் ஹரிகிருஷ்ணன் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்த்துறையினர் ஹரிகிருஷ்ணனிடமும் அவரிடம் வேலை பார்த்து வந்த விமல் என்பவரிடமும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஹரிகிருஷ்ணன் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. காவல்துறையினர் ஹரிகிருஷ்ணனிடம் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர்.

வேறு வழியின்றி ஹரிகிருஷ்ணன், தமிழ்செல்வி ஓமலூரில் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். உடனடியாக காவல்துறையினர் ஓமலூருக்கு சென்று தமிழ்ச்செல்வியை தேடி கண்டுபிடித்தனர்.

தமிழ்செல்வி தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்து சென்றதாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். மேலும் அவருடன் இணைந்து வாழும் திட்டமில்லை என்றும் கூறியுள்ளார். 

இந்த சம்பவமானது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.