இறந்துபோன சுபஸ்ரீயின் தந்தை கண்ணீர் மல்க அளித்த பேட்டியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே பொண்ணு..! அவ தான் கடைசியா இருக்கனும்! கண்ணீருடன் கதறிய சுபஸ்ரீ தந்தை!
சென்னையில் ரேடியன் சாலை அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் இல்லத்திருமண விழா நடைபெற்றது. இதற்காக சாலை முழுவதும் பேனர்கள் போஸ்டர்கள் என்றும் பிரம்மாண்டமாக அரங்கேற்றம் செய்யப்பட்டிருந்தன. இங்கு இருசக்கர வாகனத்தில் பி.டெக் படிக்கும் சுபஸ்ரீ என்ற மாணவி சென்று கொண்டிருந்தார்.
சாலையோரத்தில் அமைந்திருந்த பேனர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் சுபஸ்ரீ நிலைதடுமாறி நடுரோட்டில் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியது.
இதில் அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். சம்பவமறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பரங்கிமலை புலனாய்வு காவல்த்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அனுமதியின்றி வைகக்ப்பட்டிருந்த பேணர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். மேலும் பல பேணர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தால் கலெக்டர் நடவடிக்கையெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே பேணர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டால் தண்டனை விதிக்கப்படும் என்று உத்திரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அரசியல் கட்சியினர் பின்பற்றாமல் செயல்படுவதை பொதுமக்கள் கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுபஸ்ரீயின் தந்தை கண்ணீர் மல்க பேட்டியளித்தார். "எனக்கு சுபஸ்ரீ ஒரே மகள். அவளுக்கு நிறைய ஆசைகள் இருந்தன. அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப பீ.டெக் படிக்க வைத்தேன். அவளுக்கு கனடாவில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக தேர்வும் எழுதினார். விரைவில் கனடா நாட்டிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளில் இருந்தபோது நேற்று பலியானார். இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும். பேணர்கள் அனுமதியின்றி வைக்கப்படுபவதை நிறுத்த வேண்டும்" என்றார்.
இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.