ஏழ்மையில் தவித்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை..! வாய் பிளக்க வைக்கும் காரணம்!

சூப்பர் சிங்கர் ஜூனியர் புகழான பூவையாரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


பிரபல தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி சூப்பர் சிங்கரில் ஜூனியர் பிரிவில் கலந்துகொண்டவர் பூவையார். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் பள்ளியில் படித்து வந்தார். மேலும் கானா பாட்டுகளை மிகவும் எளிதில் பாடக்கூடிய திறமை பெற்றிருந்தார்.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் பட்டம் பெற்ற பிறகு அவருடைய வாழ்க்கை தலைகீழாக மாறியது. சில படங்களில் பாடுவதற்கும், நடிப்பதற்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

சமீபத்தில் இளையதளபதி விஜய் நடித்து வெளியாகிய "பிகில்" திரைப்படத்திலும் பூவையார் நடித்தும் பாடியும் இருந்தார். இதனிடையே அடுத்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் புகைப்படத்தை புவையார் சமூகவலைதளங்களில் வெளியிட்டார்.

இந்த புகைப்படத்திற்கு பல்லாயிரக்கணக்கான லைக்குகள் குவிந்துள்ளன‌. மேலும் பூவையார் நன்றாக திறமையை வெளிப்படுத்தி, ஏழ்மையின் பிடியிலிருந்து விலக வேண்டும் என்று பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.