கொரொனாவுக்குப் பிறகு தேசிய மற்றும் சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக பல மாநிலங்களில் முதலீடுகள் குறைந்துள்ளன. இத்தகைய இக்கட்டான தருணத்திலும் இந்தியாவிலேயே அதிகளவில் முதலீடுகளை ஈர்த்து சாதனை படைத்திருக்கிறது...முதல்வர் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு.
எடப்பாடி அரசின் இமாலய சாதனை… தொழில்மயமாகிறது தமிழ் நாடு.
சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தொழில்துறை சார்பில் 19 ஆயிரத்து 995 கோடி ரூபாய் முதலீட்டில், 26 ஆயிரத்து 509 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், 18 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 4 ஆயிரத்து 456 கோடி ரூபாய் முதலீட்டில் 27 ஆயிரத்து 324 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் ஐந்து நிறுவனங்களின் தொழிற் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இது தவிர, 47 கோடி ரூபாய் முதலீட்டில் 385 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் ஒரு நிறுவனத்தின் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளால் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. நவீன உலகுக்கான புதிய சிந்தனைகள், சீரிய செயல்திறன், தொடர் செயல்பாடுகள், நிலைத்தன்மை ஆகிய நான்கும் அரசின் செயல்பாடுகளின் அடித்தளமாக விளங்குகின்றன . இதன் காரணமாக முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது’’ என்றார்.
கடந்த 4 ஆண்டுகளில் தமிழக தொழில்துறை வரலாறு காணாத வளர்ச்சியை எட்டியுள்ளது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 3 லட்சத்து, 501 கோடி ரூபாய் முதலீட்டில், 10.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், 304 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தை தொழில் நகரமாக மாற்றாமல் விடமாட்டார் எடப்பாடி என்பதுதான் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு.