சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் இரண்டாவதாக ஒருவருக்கு கொரானா வைரஸ் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 2வது நபரை தாக்கியது கொரோனா..! மேலும் 37 பேர் தொடர் கண்காணிப்பு! அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
அனைத்து இடங்களிலும் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளோம். சிறப்பு ரயில்களை நிறுதியுள்ளோம். இன்று ஒரே நாளில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 25 பேரின் ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதே போல் இரண்டாவதாக ராஜிவ்காந்தி மருத்துவமனையில் இருந்த டெல்லியை சேர்ந்த 20 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த இளைஞர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை தொடர்கிறது. முதலாவதாக சிகிச்சை பெற்று வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றுவிட்டார்.
பூந்தமல்லி சுகாதார மையத்தில் 37 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை. முன் எச்சரிக்கைக்யாகவே அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.